பறவையைத் தொடர்வோம்...
செங்கால் நாரை, கொக்கு இன வகைகளில் மிகப் பெரியது. ஆசியா, இந்தியாவிலிருந்து இந்தோனேஷியா வரை உள்ள


செங்கால் நாரை
செங்கால் நாரை, கொக்கு இன வகைகளில் மிகப் பெரியது.
ஆசியா, இந்தியாவிலிருந்து இந்தோனேஷியா வரை உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள மரங்களடர்ந்த நீர் நிலைகளில் வசிக்கும் பறவை. நீண்ட குச்சிகளை வைத்து மரங்களில் கூடு கட்டி வசிக்கும். ஒரு சமயத்தில் 2 முதல் 5 முட்டைகள் வரை இடும். பெரும்பாலும் அமைதியாக இருக்கும் இந்தப் பறவை தனது இனப் பறவைகளைக் கண்டுவிட்டால் அதிகமாகச் சத்தம் போடும்.
இதன் சிறகுகள் மிகவும் அகலமானவை. இதனால் இந்தப் பறைவயால் நீண்ட தூரம் பறக்க முடியும்.
இதன் உயரம் 85 செ.மீ. முழுவதும் செங்கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தைச் சுற்றிலும் வெண்கம்பளி சுற்றியது போல இருக்கும். நீண்ட சிவப்பு நிறக் கால்களைக் கொண்டிருப்பதால் இந்தப் பெயர் வந்தது.
தனது இரைக்காக மிகவும் பொறுமையாகக் காத்திருக்கும். பெரிய பூச்சிகளையும் ஊர்வனவற்றையும் விரும்பிச் சாப்பிடும்.
ஆண்டி வாத்து
ஆண்டி வாத்து ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் காணப்படும். இதன் மூக்கு ஒரு கரண்டியைப் போல இருக்கும். இதனால் இதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். தலை கரும்பச்சை நிறத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும். சிறகுகள் பச்சை நிறத்தில் இடையிடையே வெள்ளை நிற வரிகளைக் கொண்டதாக இருக்கும்.
48 செ.மீ. நீளமும் 600 கிராம் எடையுமுள்ள பறவை. சிறகுகளை விரித்தால் 76 செ.மீ. நீளம் இருக்கும்.
இதுவும் ஏரிகளிலுள்ள செடிகளையே உணவாகக் கொள்ளும். நீரோடு சேர்த்து நீர்ச்செடிகளை தனது கரண்டி வாயால் அள்ளிக்கொண்டு, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக அலகை ஆட்டி ஆட்டித் தண்ணீரை வடிகட்டி விட்டுத் தனது உணவைச் சாப்பிடும். இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
ஒரு சமயத்தில் 9 முட்டைகள் வரை இடும்.
புள்ளிமூக்கு வாத்து
புள்ளிமூக்கு வாத்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் நாடுகளில் அதிகம் காணப்படும். 63 செ.மீ. நீளமிருக்கும் இந்த வாத்து 1500 கிராம் எடை உள்ளது. சாம்பல் நிறப் பறவை. தலை சற்றே வெளுப்பாகவும் கழுத்துப் பகுதி மஞ்சள் நிறத்திலும் இருக்கும். கருப்பு நிற அலகின் முனையில் மஞ்சள் நிறம் பளிச்சென்று காணப்படும். சில ஆண் பறவைகளுக்கு அலகில் சிவப்பு நிறமும் காணப்படும்.
ஏரிகளிலும் சதுப்பு நிலங்களிலும் வாழும் பறவை. அங்கேயே இருக்கும் புதர்களில் கூடு கட்டி வசிக்கும். பெரும்பாலும் மாலை மற்றும் இரவு நேரங்களிலேயே இரைக்காக வெளியே வரும். செடிகளையே உணவாகக் கொள்ளும்.
ஒரு சமயத்தில் 8 முதல் 14 முட்டைகளை இடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...